ஓடும் ரயிலில் பக்கெட்டுடன் குளித்த நபர்! ஸ்லீப்பர் கோச்சில் சோப்பு, ஷாம்பு! பிறகு என்னாச்சு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ரயில் பயணிகளின் நன்மை, வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, பயணிகளுக்கான அலைச்சலை தவிர்த்துள்ளது.. கூடுமானவரையில் ரயில் பயணத்தை சுலபமாக்கவும், சௌகரியமாக தரவும் முயற்சித்து வருகிறது. ஆனால், ரயில்வே விடுக்கும் எந்த அறிவுறுத்தல்களையும் சில பயணிகள் மதிப்பதில்லை.. அப்படி ஒரு சம்பவம்தான் மீண்டும் தற்போது நடந்துள்ளது.

ரயில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. அதேபோல பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருப்பதால், அது தொடர்பான எச்சரிக்கைகளை தொடர்ந்து விடுத்து வருகிறது.

railway sleeper coach

ஓடும் ரயிலிலும் ரீல்ஸ் மோகம்

அதன்ஒருபகுதியாக, ரீல்ஸ் வீடியோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.. அதாவது, இன்று இளைய தலைமுறையிடம் ரீல்ஸ் மோகம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது.. பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், மேம்பாலங்கள், உயரமான நீர்வீழ்ச்சிகள், கடல் பகுதிகள் என எந்த இடமாக இருந்தாலும்சரி, ரீல்ஸ் எடுத்துவிடுகிறார்கள்.

இதில் ஆபத்து நிறைந்த பகுதிகளில் ரீல்ஸ் எடுப்பதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.. ஆனால், ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.. இதில் இளம் மரணங்களை ஜீரணிக்கவே முடிவதில்லை..

தண்டவாளங்களில் ரீல்ஸ்

இந்த ரீல்ஸ் மோகமானது, ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில்கூட விரிவடைந்து செல்கிறது.. அவ்வளவு ஏன்? ரயில் வரும்நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து, சிலர் பீதியை கிளப்பி விடுகிறார்கள்..

ஆகவே, இதுபோன்ற விபத்து, அஜாக்கிரதை, உயிரிழப்புகள் போன்றவற்றை தடுக்க ரயில்வே துறை விடாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று 2 மாதங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது.

அதாவது, ரயில்வே ஸ்டேஷன்களில் போட்டோ எடுக்கலாம், ஆனால், வீடியோவுக்கு அனுமதி இல்லை.. இது தெரிந்தும்கூட பலர் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதாக புகார்கள் வந்தது.

ரூ.1000 அபராதம்

எனவேதான், ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளம் ஆகியவற்றில் யாராவது ரீல்ஸ் எடுத்தால், குறைந்தபட்சம் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும், என்றும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் ரயில்வே வார்னிங் தரப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இந்த விதிமுறைகளையும் சிலர் மதிக்காமல் உள்ளது அதிர்ச்சியை தந்துவருகிறது.. ஓடும் ரெயிலில் ஸ்லீப்பர் கோச்சில், பக்கெட்டில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கப்பில் எடுத்து தன்னுடைய தலையில் அள்ளி அள்ளி ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, கையோடு கொண்டு வந்திருந்த சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கிறார்.. இந்த குளியல் காட்சியை அவரே வீடுயோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்..

திடீர் ஃபேமஸ்

இந்த வீடியோ சற்று நேரத்திற்கெல்லாம் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த இணையவாசிகள் கடுமையான அதிர்ச்சியடைந்தனர்.. சம்பந்தப்பட்ட நபர் யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்றும் விமர்சித்து பதிவிட்டனர்.

இதனிடையே ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரியவந்தது. சோஷியல் மீடியாவில் திடீரென ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவே இப்படி குளிக்கும் வீடியோ எடுத்து போஸ்ட் செய்தாராம்.

வரம்பு மீறக்கூடாது

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன், சம்பந்தப்பட்ட இளைஞர் மீது ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என்றும், இதுபோன்ற தவறான மற்றும் பயணிகளுக்கு சிரமம் தரும் எந்தவொரு செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்று வட மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+