வயதான மாமியாரை மட்டும் அல்ல கணவரையும் இரும்புக் கம்பியால் தாக்கிய உ.பி. சங்கீதா: வீடியோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் படுத்த படுக்கையாக இருக்கும் மாமியாரை அடித்த பெண் தனது கணவரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்தவர் சந்தீப் குமார் ஜெயின். துணிக் கடை வைத்துள்ளார். அவரது மனைவி சங்கீதா ஜெயின். அவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சங்கீதா சந்தீப்பின் 70 வயது தாயான ராஜ்ராணியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

சங்கீதாவை கையும் களவுமாக பிடிக்க சந்தீப் தனது தாயின் அறையில் சிசிடிவி கேமராவை பொருத்தினார். சங்கீதா கேமரா இருப்பது தெரியாமல் வயதான ராஜ்ராணியை கழுத்தை நெறித்து, தலையில் கல்லால் அடித்து சித்ரவதை செய்தார்.

அந்த வீடியோவை பார்த்த போலீசார் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மற்றும் ஒரு சிசிடிவி கேமரா வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சங்கீதா தனது கணவரின் கடைக்கு சென்று அவரை இரும்புக் கம்பியால் தாக்குகிறார்.

கடையில் இருக்கும் துணி ரோலால் கணவரை தாக்குகிறார். பின்னர் துணி ரோல்களை எடுத்து கடைக்கு வெளியே வீசுகிறார். சங்கீதா சந்தீப்பையும் இத்தனை ஆண்டுகள் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+