ஆர்.டி.ஐ. ஃபைல் செய்த பாட்டி: பேரனை டிஸ்மிஸ் செய்த பள்ளி நிர்வாகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாட்டி ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக விண்ணப்பித்த காரணத்தினால் 10 வயது மாணவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ளது சரஸ்வதி சிசு வித்யா மந்திர். அந்த பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தவர் அமோக் பதக்(10). அவரது பாட்டி மால்தி தேவி. சமூக ஆர்வலரான தேவி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிய விண்ணப்பித்தார்.
பள்ளியின் கட்டண முறை, அந்த பணத்தை நிர்வாகம் எப்படி செலவு செய்கிறது உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டிருந்தார். பள்ளி நிர்வாகம் போலியான ஆவணங்களை காட்டி உயர்நிலைப்பள்ளிக்கு அனுமதி வாங்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி பள்ளி நிர்வாகம் அமோகின் குடும்பத்தினரை வரவழைத்து மாணவரை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தது.
இது குறித்து தேவி கூறுகையில்,
நான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டு விண்ணப்பித்ததில் இருந்து பள்ளியில் எனது பேரனை குறி வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் அவனை அடித்துள்ளனர். என் பேரனா அந்த விண்ணப்பத்தை கொடுத்தார். பின்னர் அவரை எதற்காக பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications