மத நல்லிணக்கம்.. அயோத்தி ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை நாங்கதான் தருவோம்.. ஷியா வாரியம் விருப்பம்!
லக்னோ: அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோயில் தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதற்கிடையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் மசூதி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு, அருகாமையில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய மசூதி கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும் என ஷியா வாரியம் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், மற்றொரு மத நல்லிணக்க நடவடிக்கையாக ஒரு அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது. சரயு நதிக்கரையின் ஓரத்தில் அமைக்கப்படும் 100 அடி உயர ராமர் சிலைக்கு வெள்ளி அம்புகளை பரிசாக வழங்க உத்தர பிரதேச மாநில இஸ்லாமிய ஷியா வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
உ.பி., மத்திய ஷியா வாரியத் தலைவர் வாசீம் ரிஸ்வி, முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பகுதியை முன்னர் ஆண்ட நவாப்கள் அயோத்தியில் உள்ள கோயில்களுக்கு மதிப்பு அளித்து வந்துள்ளனர். மத்திய அயோத்தியாவில் உள்ள அனுமார் கோயிலுக்கு தேவையான நிலத்தை 1739ம் ஆண்டு நவாப் ஷுஜா-உத்-தவ்லா நன்கொடையாக அளித்திருந்தார். 1775-1793 ஆண்டுகளுக்கு இடையில் அங்கு கோயில் கட்டுவதற்கான நிதியை நவாப் ஆசிப்-உத்-தவ்லா வழங்கினார்.
ராமருக்கு சிலை அமைக்கும் மாநில அரசின் முடிவு பாராட்டத்தக்கது. இந்த முடிவு உலக வரைப்படத்தில் அயோத்தி நகருக்கு தனிப்பெருமை சேர்க்கும். ஒருமைப்பாட்டை உணர்த்தவும், ஷியா இனத்தவர்கள் ராமரின் மீது வைத்திருக்கும் நன்மதிப்பின் அடையாளமாகவும் ராமர் சிலையில் உள்ள அம்பரா தூளிக்கான வெள்ளி அம்புகள் பத்தை, பரிசாக அளிக்க ஷியா வாரியம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications