ஆசை ஆசையாய் மனைவியிடம் ஓடிய கணவன்.. அங்கேதான் பயங்கர ட்விஸ்ட்.. அப்படியே பாலச்சந்தர் படம் மாதிரியே!
உத்தரபிரதேசத்தில் மாமனாரை மணந்துள்ளார் ஒரு பெண்
கான்பூர்: பாலச்சந்தர் படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மருமகளுக்கு மாமனாரே கணவர் ஆகிவிட்டார்.. அந்தப் பெண்ணின் கணவருக்கு அவர் சித்தியாகி விட்டார். இதுதான் வித்தியாசமான செய்தி.."விதி"யும் கூட!
உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 22 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.
இந்த இளைஞரின் அப்பா ஒரு துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.. அப்பாவுக்கு 48 வயதாகிறது.

ஜாலி
ஆனால், அப்பா அவர் மட்டுமே சம்பாதித்து ஜாலியாக, தனியாக வாழ்ந்து வந்தார்.. மகனை கவனிப்பதே இல்லையாம்.. அப்பாவின் நடவடிக்கை எல்லாம் மகனுக்கு விநோதமாகவே இருந்து வந்துள்ளது. ஒருநாள், தன்னுடைய அப்பாவை பற்றி தகவல் வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் ஆர்டிஐ செய்தார்.. சில தகவல்களையும் சேகரித்தார்.. அப்போதுதான் அந்த செய்தி இடியாய் இளைஞன் தலையில் இறங்கியது.

மனைவி
அந்த இளைஞனின் மனைவியை, இந்த அப்பாவே கல்யாணம் செய்து கொண்ட தகவல் கிடைத்துள்ளது.. இதை கேட்டு ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த மகன், ஸ்டேஷனுக்கு ஓடிப்போய் புகார் தந்தார்.. போலீசாருக்கும் குழப்பம் ஆகிவிட்டது.. எனினும், இரு தரப்பையும் சமாதானம் பேச ஸ்டேஷனுக்கு அழைத்திருந்தனர். அப்பாவை பார்த்ததுமே மகன் டென்ஷன் ஆகிவிட்டார்.. அங்கேயே இரு தரப்பினரும் மோதி கொண்டனர்..

காதல்
அதாவது, 2016-ல் இளைஞர் அந்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.. அப்போது இளைஞனுக்கும், அந்த பெண்ணுக்கும் 18 வயது ஆகவில்லை.. சில நாட்களில் இருவருமே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.. 6 மாதத்தில் பிரிந்து விட்டனர்.. இவர்கள் 2 பேருமே மைனர் என்பதால் முறைப்படி ரிஜிஸ்தரும் செய்யவில்லை.. 18 வயது ஆகிவிடவும், ஒருநாள் அந்த இளைஞர், முன்னாள் மனைவியை தேடி சென்றார்.. நாம் இப்போது சேர்ந்து வாழலாம் என்று கூப்பிட்டுள்ளார்.

மனைவி
ஆனால், அந்த பெண், கணவனுடன் செல்ல மறுத்துள்ளார்.. நீ ஒரு குடிகாரன், உன்னுடன் வாழ முடியாது என்று சொல்லி உள்ளார்.. அப்போதுதான் இளைஞனுக்கு விஷயம் தெரிந்தது, தன்னுடைய முன்னாள் மனைவி, இப்போது அப்பாவுக்கே மனைவி ஆகி இருந்தார்.. அதுமட்டுமல்ல, இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறதாம்..

சித்தி
இதை பற்றி போலீசார் சொல்லும்போது, இளைஞருடன் திருமணம் செய்ததற்கான சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லை என்பதால் நாங்கள் வழக்குப்பதிவு செய்யவில்லை... அந்தப்பெண்ணும் தனது 2து கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாக சொன்னார்.. இதனால் இந்த விவகாரத்தில் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றனர்... மனைவியுடன் வாழலாம் என்று ஆசை ஆசையாக ஓடிச்சென்ற இளைஞனுக்கு, அந்த மனைவியே "சித்தி"யான சம்பவம்தான் உபியில் நடந்துள்ளது..
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications