அம்மாடியோவ்.... மன்மோகன் சிங்கின் 73 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 676 கோடி செலவு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவி காலத்தில் 73 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ676 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் ராஷ்டிர ரக்ஷக் ஜன்மஞ்ச் என்ற அமைப்பின் தலைவர் ரமேஷ் சந்த் ஜோஷி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் குறித்து தகவலைப் பெற்றுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
- 2004ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அவர் மொத்தம் 73 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
- இதில் 2009-2014ஆம் ஆண்டு காலத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது 15 வெளிநாட்டுப் பயணங்களை மன்மோகன்சிங் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
- அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு 6 முறை மன்மோகன்சிங் சென்றுள்ளார். ஆனால் இந்தியாவின் அண்டைநாடுகளுக்கு மிகக் குறைவான முறையே அவர் பயணம் மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- 2012ஆம் ஆண்டு மெக்சிகோ மற்றும் பிரேசில் பயணத்துக்கு அதிகபட்சமாக ரூ26.94 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- இதற்கு அடுத்தபடியாக 2010ஆம் ஆண்டு அமெரிக்கா- பிரேசில் பயணத்துக்கு ரூ22.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- மன்மோகன்சிங்குக்கு முன்னர் 1999-2004ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் 35 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். அந்த பயணங்களுக்கான செலவு ரூ185 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications