உ.பி. பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு!!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பலாத்கார சம்பவங்களைக் கண்டித்து ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இன்று ராஜ்யசபாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பகுஜன் தலைவர் மாயாவதி தலைமையில் அக்கட்சி எம்.பிக்கள் ஒன்று திரண்டு ராஜ்யசபா தலைவர் இருக்கை முன்பாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் சபையில் குழப்பம் நிலவியது.
இதனால் சபை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியபோதும் இதே கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications