சட்டசபையில் நாற்காலிகளை தூக்கி வீசி உறுப்பினர்கள் கூச்சல்... ஒத்தி வைத்த சபாநாயகர்
காஷ்மீர் சட்டசபையில் கத்தி கூச்லிட்ட உறுப்பினர்கள் நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி வீசினர். இதனால் சட்டசபையை சபாநாயகர் ஒத்தி வைத்தனர்.
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நாற்காலி மற்றும் மேசைகளை தூக்கி வீசியதால் சபைக்காவலர்கள் காயமடைந்தனர்.
காஷ்மிர் சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி, அரசியல் சட்டம் 370வது விரிவு குறித்து கருத்துக் கூறினார்.

இதற்கு எதிர்கட்சித் தலைவர் அதிருப்தி தெரிவித்து பிரச்சனை எழுப்பினார். அவரைத் தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்களும் முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
சபையில் கூச்சல் குழப்பம்
பதிலுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் முழக்கமிட்டனர். இதனால் சபையில் பெறும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பறந்த மேசை, நாற்காலிகள்
உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் நாற்காலி, மேசை, மைக்குகள் என அனைத்தையும் தூக்கி எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைக் கட்டுப்படுத்த சபாநாயகர் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் எடுபடவில்லை.
30 நிமிடம் ஒத்திவைப்பு
இதையடுத்து சபாநாயகர் அவையை 30 நிமிடம் ஒத்திவைத்தார். உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது முதல்வர் மெகபூபா முப்தி சட்டசபையில் இல்லை.
சபைக்காவலர் காயம்
சட்டசபையில் நடந்த இந்த அமளி துமளியில் சபைக்காவலர் ஒருவர் காயமடைந்தார். உறுப்பினர்களின மோதலால் காஷ்மீர் சட்டசபை போர்க்களம் போல் காட்சியளித்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications