இந்த பக்கம் திமுகவை சாடிவிட்டு.. ராஜஸ்தானில் இலவச ஸ்கூட்டி திட்டம் அறிவித்து காங்கிரஸை கவிழ்த்த பாஜக

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இலவச திட்டங்களுக்கு எதிராக பேசிய பாஜக, ராஜஸ்தான் மாநிலத்தில் இலவச தேர்தல் வாக்குறுதியை கொடுத்து தேர்தலில் முன்னிலை பெற்று இருக்கிறது.

கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸிடம் இருந்து பாஜக ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், பிரதான காரணமாக சொல்லப்படுவது தேர்தல் வாக்குறுதிகள்தான். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

url - Rajasthan election: BJP won election in Rajasthan by announcing freebies in manifesto

அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேசும்போது ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சனையை கிளப்பி பெரிய அளவில் பாஜக விவாத பொருளாக்கியது. ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரங்களிலும் இதனை அக்கட்சியினர் தொடர்ந்து பேசி வந்தனர்.

இந்த நிலையில் பெண்களை கவரும் வகையில் நலத்திட்டங்கள், இலவச திட்டங்களை ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் பாஜக வெளியிட்டது. அதன்படிதான், உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு தலா ரூ.450 விலையில் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பாஜக வெளியிட்டது. அதேபோன்று பெண் குழந்தை பிறக்கும்போது ரூ.2 லட்சம் சேமிப்புப் பத்திரம் வழங்கப்படும் என்றும், 6 லட்சம் கிராமப்புற பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஏழை குடும்பங்களின் பெண்களுக்கு இளநிலை பட்டம் வரையிலான இலவசக் கல்வி, பிரதம மந்திரி மாதரு வந்தனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை ரூ.5,000 லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படும் என்று பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அனைத்தையும் விட மேலாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட இலவச திட்டமான பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை ராஜஸ்தானில் கையில் எடுத்தது பாஜக. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாஜகவுக்கு பெருமளவில் கைகொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இலவச தொலைக்காட்சி, இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச அரசி, இலவச ரேசன் பொருகள், மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு இலவச மற்றும் மானிய திட்டங்களை பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்தது. இந்த நிலையில் ராஜஸ்தானில் அதே இலவச திட்டத்தை அறிவித்து அக்கட்சி பெண்களின் வாக்குகளை வெகுவாக ஈர்த்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+