அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட்.. 10 நிமிட ஆன்லைன் டெலிவரியால் வியந்துபோன வெளிநாட்டு சிஇஓ - என்ன நடந்தது?
ராஞ்சி: அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட். இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா இப்போது 2030ம் ஆண்டுக்கான வளர்ச்சியில் உள்ளது என்று அமெரிக்காவில் சிஇஓவாக இருக்கும் ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். பிளிங்கிட்டில் அவர் தனக்கும், தனது தோழிக்கும் ஆடைகள் ஆர்டர் செய்த நிலையில் 10 நிமிடத்தில் டெலிவரி ஆனதால் அவர் இப்படி புகழ்ந்துள்ளார்.
அமெரிக்காவில் ட்ரிஃபெட்ச் எனும் நிறுவனத்தை நடத்தி வருபவர் வருணி சார்வால். இவர் தனது தோழியுடன் இந்தியா வந்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடக்கும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வந்தார்.

இந்நிலையில் தான் அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்ட பதிவு அதிக கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை விட இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்று கூறி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக வருணி சார்வால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛சான் பிரான்சிஸ்கோவில் தானாகவே இயங்கும் கார் உள்ளது. ஆனால் இந்தியாவில் அனைத்தும் 10 நிமிடங்களில் கிடைக்கிறது. இதில் எது சுவாரசியமானது என சொல்ல எனக்கு தெரியவில்லை. நான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தேன்.
இப்போது மீண்டும் திரும்பி வந்தேன். அமேசான் பிரைமின் ‛2 நாள் டெலிவரி' இந்தியாவின் 10 நிமிட டெலிவரியை உறுதி செய்கிறது. என் தோழி ரோஸ்மேரி உடன் நான் ராஞ்சியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தேன். நாங்கள் Haldi விழாவுக்கான ஆடையை மறந்துவிட்டோம்.
அமெரிக்காவில் இப்படி நடந்து இருந்தால் நாங்கள் நீண்டதூரம் பயணித்து மாலுக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்தியாவில் பிளிங்கிட் வழியாக ஆர்டர் செய்தோம். 15 நிமிடங்கள் நாங்கள் ஆர்டர் செய்த ஆடைகள் ஹோட்டலுக்கு வந்தன. இந்தியாவில் வாடிக்கையாளர்களான பிசினஸ் வேகமாக முன்னேறி 2030ம் ஆண்டில் உள்ளது'' என கூறியுள்ளார்.
இந்த பதிவில் வருணி சார்வால் மற்றும் அவரது தோழி ஆகியோர் ஆர்டர் செய்து வாங்கிய ஆடையை அணிந்துள்ளனர். வருணி சார்வால் வேஷ்டி போன்று வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார். அவரது தோழி மஞ்சள் நிற மேலாடையுடன், கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார்.
இதுபற்றியும் அவர்கள், ‛‛உற்று கவனித்து பார்த்தால் ரோஸ் ஆண்கள் அணியும் குர்தாவையும், நான் ஆண்கள் அணியும் வேஷ்டியையும் அணிந்துள்ளேன். நாங்கள் வேகமான டெலிவரியை தான் விரும்புனோம். பாலினம் சார்ந்த ஆடையை விரும்பவில்லை என்றும் அதற்கு விளக்கம் அளித்து இருந்தனர். இந்த பதிவு தற்போது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. இதனை பார்க்கும் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
பலரும் இந்தியாவில் விரைவான டெலிவரி சேவையை பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் இந்தியா, அமெரிக்கா இடையேயான வாழ்க்கை முறையை ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர், 10 நிமிட டெலிவரியையும், தானாக இயங்கும் காரையும் ஒப்பிடுவது சரியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்னொருவரோ, ‛‛என்னை பொறுத்தவரை அமெரிக்கா அல்லது ஐரோப்பியாவில் குடியேறுவதை தான் விரும்புகிறேன். ஆனால் உங்களுக்கு இந்த 10 நிமிட டெலிவரி பெரியதாக தெரிகிறது'' என்று கருத்து தெரிவித்து சீண்டி உள்ளார். தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருவதால் இந்த பதிவு வைரலாகி உள்ளது.
-
ஈரானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம்.. வழிக்கு வந்த டிரம்ப்! போருக்கு குட்டி பிரேக்! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications