அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் திருத்தம் செய்வோம்.. இந்தியாவுக்கு கெர்ரி உறுதி
டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படும் அமெரிக்க குடியேற்ற சட்ட மசோதாவில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். இதன் மூலம் இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த சட்ட மசோதா, இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களைக் குறி வைத்துக் கொண்டு வரப்படுவதாக இந்தியாவில் அச்சம் உள்ளது. இந்தியா வந்துள்ள கெர்ரியிடம் இதுகுறித்து இந்தியத் தரப்பில் கவலையும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்த உறுதிமொழியை கெர்ரி அளித்துள்ளார்.

இதன் மூலம் அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் பணியாற்றக் காத்திருக்கும் இந்திய தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு சற்று ஆறுதல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கெர்ரியுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், நாங்கள் அந்த சட்டத்தை எதிர்க்கவில்லை. குடியேற்றம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். அதில் நாங்கள் தலையிடவும் விரும்பவில்லை.
அதேசமயம், அதில் உள்ள சில அம்சங்கள் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறைக்கு பாதகமாக உள்ளது. இதுதான் எங்களுக்குக் கவலை தருகிறது. இதைத்தான் நாங்கள் கெர்ரியிடம் சுட்டிக் காட்டினோம். தற்போதைய வடிவில் இது நிறைவேறினால் இந்திய நிறுவனங்களை அது பாதிக்கும் என்று கெர்ரிக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார் சுஷ்மா.
அமெரிக்காவின் புதிய மசோதாவின்படி அமெரிக்காவில் சென்று பணி புரிவதற்கான எச்1பி தொழில்முறை விசாக்களுக்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்படும். மேலும், அங்குள்ள தங்களது நிறுவனங்களுக்குச் சென்று பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்துக் கெர்ரி கூறுகையில், திருத்தங்கள் குறித்து அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளார். இன்னும் இது செனட்டில் நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் கவலையும் கருத்தில் கொள்ளப்படும். அதில் நிச்சயம் திருத்தங்கள் வரும். சில மாற்றங்களுக்கு அதிபரும் கூட ஆதரவு தெரிவிப்பார். இந்தியாவின் கவலை உள்ளிட்ட பிற அம்சங்களும் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
அதேசமயம், இந்த மசோதாவானது அமெரிக்காவுக்கு முக்கியமானது. அமெரிக்காவில் தேர்தல் வரவுள்ளது. அது முடிந்ததும் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும் என்றார் கெர்ரி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications