உத்தரபிரதேசம்: பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து- 7 குழந்தைகள் பலி
படோஹி: உத்தர பிரதேச மாநிலம் படோஹி அருகே, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர், 12 குழந்தைகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படோஹி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த அலகாபாத் - வாரணாசி பயணிகள் ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை மீது பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டும் தண்டவாளத்தை கடக்க வேன் டிரைவர் முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயலும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மாவ் மாவட்டத்தில் ஆளில்லா வழித் தடத்தை கடந்த செல்ல முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications