தொழில், பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரியாகும் உத்தர பிரதேசம்.. யோகி ஆதித்யநாத் திட்டம் இதுதான்
லக்னோ: இந்தியாவில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரி மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும். இந்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என யோகி ஆதித்யநாத் சூளுரைத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் தான் மாநிலத்தில் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் யோகி ஆதித்யநாத் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் கோரக்பூர் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் (GIDA பால் ஆலையை அவர் திறந்து வைத்தார்.
இந்த பால் ஆலை என்பது 300 இளைஞர்களுக்கு நேரடி வருமானத்தை வழங்கும். மேலும் 1,000 இளைஞர்களை இந்த தொழிலுக்குள் கூடுதலாக கொண்டு வர முடியும் என உத்தர பிரதேச அரசு நம்புகிறது. மேலும் தினமும் 6 லட்சம் லிட்டர் பால் இந்த ஆலையில் கையாளப்பட உள்ளது. இதுமட்டுமின்றி கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மேலும் மாநிலத்தின் விவசாயத் துறையை மேம்படுத்த உள்ளது.
இந்த விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: மாநிலத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொந்தளிப்பான சூழல் இப்போது இல்லை. வகுப்புவாத மோதல்கள் மற்றும் குழப்பங்கள் இதற்கு முன்பு மாநிலத்தின் இமேஜை கெடுத்துவிட்டன. இதனால் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் குற்றவாளிகள் மீது சகிப்புத்தன்மை காட்டுவது இல்லை. இதனால் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்துள்ளது. இது மாநில வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
நாட்டில் உத்தர பிரதேசத்தின் வளர்ச்சி என்பது மேல்நோக்கி உள்ளது. இதற்கு வணிகம், வர்த்தகத்தை எளிதாக்கும் நடைமுறையும் தான் காரணம். சீர்த்திருத்தங்கள் மற்றும் கவுசல் விகாஸ் யோஜனா மாநில இளைஞர்களின் திறன் மேம்பாடு பயிற்சியும் முக்கிய காரணமாக உள்ளது. அதோடு உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு இந்த ஆண்டு நடந்தது.
இந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.38 லட்சம் கோடிக்கு முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. இது முதலீட்டாளர்களுக்கும், அரசுக்கும் இடையேயான உறவை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. மேலும் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியம். மேலும் இளம் வயதினர் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் முடியும்'' என்றார்.












Click it and Unblock the Notifications