அடியோடு மாறப்போகும் அயோத்தி.. ராமர் கோயில் திறப்புக்காக.. மொத்தமாக மாறும் நகரம்
அயோத்தி: அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் சரியானது. அங்கு ராமர் கோயிலைக் கட்ட ராமர் கோயில் டிரஸ்ட்டும் அமைக்கப்பட்டு, கட்டுமான பணிகள் விரைவாகத் தொடங்கப்பட்டன. அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்குக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த கோயிலின் கட்டுமானப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்தக் கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் ரெடியாகி வருகிறது.

இந்த கோயிலைக் கட்ட ரூ 1000 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பொதுமக்கள் அளித்த நன்கொடைகள் மூலம் கோயில் கபணிகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தரை தளம் மற்றும் கர்ப்ப கிரகம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடியும் என்று கூறப்படுகிறது. சிற்பங்கள், மற்றும் கோயில் வளாகத்தின் மற்ற வேலைகள் 2025 வரை நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
360 அடி நீளம், 235 அடி அகலத்தில் அமையவுள்ள இந்த கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களின் கட்டப்படுகிறது. கட்டுமானப் பணிகளில் இரும்பு மற்றும் செங்கற்கள் பயன்படுத்தப்படவில்லை. மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த கோயிலில், ஐந்து மண்டபங்கள் இருக்கும். பக்தர்களுக்கான தனி மையம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், ஆடிட்டோரியம், கால்நடை மையம் ஆகியவற்றையும் இந்த கோயில் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அயோத்தி ராமர் கோயிலை 2024 ஜனவரியில் திறக்க திட்டமிட்டுள்ள அரசு திட்டுள்ளது. இதற்காக அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படுகின்றன. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டமும் ரெடியாகி உள்ளது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவையாக இருக்கும். இதுதவிர அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்கள் பக்தர்களுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரமாண்டமாக ரெடியாகும் ராமர் கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகிறார்கள். இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை.
அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் நிச்சயம் ஒதுக்கப்படும். ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்" இவ்வாறு உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications