சாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை

Subscribe to Oneindia Tamil

அலிகார்: கஞ்சா குடிக்கும் சாமியாருடன் பழக்கம் வைத்துக்கொண்டிருந்த ஒருவனுக்கு பணக்காரனாகவேண்டும் என்று ஆசை. கோடீஸ்வரனாக வேண்டுமானால் என்ன செய்வது என்று அந்த சாமியாரிடம் கேட்க, அதற்கு அவனோ உன் மனைவியை அனுப்பி வை, அவளுடன் நான் உறவு கொண்டால் நீ பணக்காரனாகலாம் என்று கூறியுள்ளான். அதைப்போய் மனைவியிடம் சொல்ல, அவளோ மறுக்க கங்கையில் மூழ்கடித்து கொன்று விட்டான் அந்த கொடூரன். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரிதான் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கட்டிய மனைவியை கொன்ற அந்த கொடூரனின் பெயர் மான்பால் சிங். அவனுக்கு சந்தாஸ் என்ற போலி சாமியாருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா அடிக்கும் அளவிற்கு பழக்கம் உருவானது. அப்படி கஞ்சா குடிக்கும் நேரத்தில்தான் கோடீஸ்வரனாகவேண்டும் என்று தான் விரும்புவதாக மான்பால் சிங் அந்த சாமியாரிடம் கூறியுள்ளான்.

Uttar Pradesh: Man kills wife for refusing to have sex with tantrik

அதற்கு அந்த சாமியாரோ கவலைப்படதே நீ உன் மனைவியை என்னிடம் அழைத்து வா நான் இரவு பூஜை செய்கிறேன். என்னுடன் அவள் உறவில் ஈடுபட வேண்டும். அதன் பின்னர் நீ கோடீஸ்வரன்தான் என்று கூறியிருக்கிறான்.

அதை அப்படியே வந்து தனது மனைவியிடம் சொல்லி அழைத்திருக்கிறான். ஆனால் அந்தப்பெண் சம்மதிக்கவில்லை. தனது அண்ணனிடம் சொல்லி அழுதிருக்கிறாள். அதைக் கேட்டு மான்பால் சிங்கிடம் வந்து சண்டை போட்டார் அந்த பெண்ணின் அண்ணன். இதனால் மான்பால் சிங்கிற்கு ஆத்திரம் அதிகமானது. அதை அடக்கிக்கொண்டு பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தார்.

கங்கையில் பூஜை செய்யலாம் வா என்று மனைவியை அழைத்துக்கொண்டு போன மான்பால், நீரில் மூழ்கடித்து கொன்று விட்டு வந்து விட்டார். இந்த செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் சகோதரனும் உறவினர்களும் காவல்துறையில் புகார் அளித்தனர். அலிகார் போலீசார் மான்பால் சிங்கையும், போலி சாமியார் சந்தாஸையும் அள்ளிக்கொண்டு சென்றனர். இந்த போலி சாமியார் ஏற்கனவே ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்தவனாம்.

பணக்காரனாகவேண்டும் என்பதற்காக கட்டிய மனைவியையே கொலை செய்த கொடூரர்களும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+