உத்தராகண்ட் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் டிஜிட்டல் பிரச்சாரம் திடீர் ரத்து! விஷயம் இதுதான்
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி செய்யவிருந்த டிஜிட்டல் பிரசாரம் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி துவங்கி நடக்கவிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டமன்ற தொகுத்கள் உள்ளது. உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது, முடிவுகள் மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

உத்தரகாண்ட்
2017 சட்டசபைத் தேர்தலில் உத்தரகாண்டில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. இதையடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா பரப்புரையை பாஜக தொடங்கியிருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி நேரடி மற்றும் காணொலி பரப்புரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாஜக செய்துள்ளது.

டிஜிட்டல் பிரசாரம்
பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் அனைவரும் நேரடி மற்றும் காணொலி முறையில் பொது பேரணிகளில் உரையாற்றுவார்கள். டிஜிட்டல் பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 இடங்களில் பிரமாண்டமான எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன, இதன் மூலம் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் காணொலி வாயிலான பேச்சினை மக்கள் கேட்க முடியும் என்று மாநில பாஜக தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி
உத்தரகாண்ட் தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று காலை டிஜிட்டல் முறையில் பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த டிஜிட்டல் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக மாநில பாஜக தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையிக், உத்தரகாண்டில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பிரசாரம் தடைபட்டுள்ளதால் பாஜக-வினர் சோகத்தில் உள்ளனர்.

வானிலை
உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் இன்றைய பிரசாரத்தில் அல்மோரா, மகேஸ்வர்,கம்பவாத், பித்ரோகர் உள்ளிட்ட சட்டசபைத் தொகுதிகளில் டிஜிட்டல் பிரசாரம் செய்யவிருந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் எல்.இ.டி அமைத்து இந்த பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். உத்தரகாண்டில் அடிக்கடி மாறிவரும் வானிலையால் தேர்தல் பிரசாரங்களும் பொதுக்கூட்டங்களும் தடைபட்டு வருகின்றன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications