உத்தரகண்ட் தேர்தல்! ஆட்டம் கண்ட நட்சத்திரங்கள்.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தோல்வி!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அம்மாநிலத்தில் போட்டியிட்ட முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 இடங்கள் உள்ள நிலையில், அதற்கு ஒரே கட்டமாகக் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. உத்தரகண்ட் தேர்தலில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருந்தது.
உத்தரகண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை தேசிய கட்சிகளுக்கான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

உத்தரகண்ட் தேர்தல்
அங்கு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கக் குறைந்தது 36 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் அங்கு ஆட்சியை அமைத்தது. இருப்பினும், அங்கு பாஜகவின் செயல்பாடுகளில் மக்களுக்குத் திருப்தி இல்லை எனக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே உத்தரகண்ட் மாநிலம் ஒரே ஆண்டில் 3 முதல்வர்களைச் சந்தித்தது. இப்போது வரை உத்தரகண்ட் மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முதல்வர் பின்னடைவு
உத்தரகண்ட் மாநில முதல்வராக உள்ள புஷ்கர் சிங் தாமி இந்த முறை காதிமா தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது வெளியாகி உள்ள முடிவுகளில், காதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்துள்ளார். அங்குக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புவன் சந்திர கப்ரி வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக இளம் தலைவர் சௌரப் பகுகுணா
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் சௌரப் பகுகுணா. இவர் உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் இளைய மகன் ஆவார். உத்தரகண்ட் சிதர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சௌரப் பகுகுணாவு காங்கிரஸ் கட்சியின் மொபீன் அலியை தோற்கடித்து வெற்றி பெற்றார். உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்படுபவர் சௌரப் பகுகுணா. இவர் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் விஜய் பகுகுணாவின் இளைய மகன் ஆவார். இந்த முறை சௌரப் பகுகுணாவுக்கு உத்தரகண்ட் சிதர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது வரை வெளியாகி உள்ள முதற்கட்ட முடிவுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் மொபீன் அலியை விட முன்னிலையில் உள்ளார்.

காங். மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், இந்த முறை லால்குவான் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். இதில் பாஜகவின் டாக்டர். மோகன் சிங் பிஷ்ட் என்பவரிடம் ஹரிஷ் ராவத் தோல்வி அடைந்தார். முன்னதாக கடந்த 2017 தேர்தலிலும் ஹரிஷ் ராவத், தான் போட்டியிட்ட ஹரித்வார் ரூரல், கிச்சா என இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத், இந்த முறை லால்குவான் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார். தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் லால்குவான் தொகுதியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை விட, ஹரிஷ் ராவத் முன்னிலையில் உள்ளார். முன்னதாக கடந்த 2017இல் ஹரிஷ் ராவத், தான் போட்டியிட்ட ஹரித்வார் ரூரல், கிச்சா என இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி தலைவர் ப்ரீதம் சிங்
உத்தரகண்ட் காங்கிரசில் மற்றொரு முக்கிய தலைவர்களில் ஒருவர் ப்ரீதம் சிங். இவர் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இந்த முறை அவர் சக்ரதா தொகுதியில் போட்டியிட்டார். தற்போது வரை வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளில் ப்ரீதம் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளார். உத்தரகண்ட் காங்கிரசில் மற்றொரு முக்கிய தலைவர்களில் ஒருவர் ப்ரீதம் சிங். இவர் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார். இந்த முறை அவர் சக்ரதா தொகுதியில் போட்டியிட்டார். தற்போது வெளியாகி வரும் முதற்கட்ட தேர்தல் முடிவுகளில் ப்ரீதம் சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளார்.
Recommended Video

ஆம் ஆத்மி முகம்
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தாண்டி பல மாநிலங்களில் தனது இருப்பை அதிகப்படுத்த முயல்கிறது. இந்த முறை பஞ்சாப், உத்தரகண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி களமிறங்கியது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் முகமாகக் கருதப்பட்ட அஜய் கொத்தியால், அம்மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், அங்கு பாஜக வேட்பாளர் சுரேஷ் சிங் சவுகான் முன்னிலையில் உள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications