திருமணமான பெண் தனக்கு விருப்பமானவருடன் வாழலாம்.. நீதிமன்ற உத்தரவால் கணவர் அதிர்ச்சி!
டேராடூன்: திருமணமான பெண் தனக்கு விருப்பமான காதலனுடனேயே வாழ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத்தை சேர்ந்த ஒருவருடன் சமூகவலைதளங்களில் பழகியுள்ளார். நாளடைவில் இவர்கள் பழக்கம் மெல்ல மெல்ல காதலாக மாறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கள்ளக்காதலன் மீது இருந்த மோகம் காரணமாக அந்த பெண், கணவர், இரு குழந்தைகளை விட்டு விட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஜிம் பயிற்சியாளர் மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். அங்கு தனது மனைவி வேறொருவருடன் வாழ்ந்து வருவதாகவும் தனது மனைவி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். நீதிபதிகள் அந்த பெண்ணை மே 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.
தனது கணவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால் இனி அவருடன் வாழ விரும்பவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பங்கஜ் புரோகித், மனோஜ் திவாரி ஆகியோர் அடங்கிய அமர்வு இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து ஜிம் பயிற்சியாளரின் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
தனது விருப்பத்தின் பேரிலேயே அந்த பெண் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் இந்த தீர்ப்புக்கு ஜிம் பயிற்சியாளரின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். இது போன்ற தீர்ப்புகள் திருமண சட்டத்திற்கு ஆபத்தாக மாறிவிடும் என்றும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என வழக்கறிஞர் தெரிவித்தார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications