யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு!
கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு தற்போது 98 வயது நிரம்பி இருக்கிறது.
இவர் பல ஆண்டுகளாக யோகா கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறார். தினமும் 100 பேருக்கும் அதிகமாக யோகா கற்றுக் கொடுக்கிறார்.
ஒரே நாளில் 20,000 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்க முயற்சி செய்து சாதனை படைத்தார். கின்னஸ் சாதனைக்காக இவர் இந்த முயற்சியை செய்தார்.


Click it and Unblock the Notifications
