பிரியா பிரகாஷ் வாரியரின் ‘அந்த’ப் படத்தை விபத்து விழிப்புணர்வுக்கு பயன்படுத்தும் போலீசார்!
வதோதரா போலீசார் வித்தியாசமான முறையில் சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
வதோதரா: வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளனர் வதோதரா போலீசார்.
சமூக ஊடகத்தின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றைய சூழலில், எந்த ஒரு செய்தியையும் அதன் வழியாக மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் சாலை பாதுகாப்பு பற்றி மக்களிடம் விழப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம் வதோதரா நகர் போலீசார் வித்தியாசமான டிவிட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள்:
உதாரணத்திற்கு ஒரு அடார் லவ் மலையாளப் படத்தில் நடித்து பிரபலாமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், இந்தி நடிகர் அஜய் தேவ்கான் உள்பட சினிமா பிரபலங்களின் படங்களை பயன்படுத்தி சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

கவனம் தேவை:
பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அடிக்கும் புகைப்படத்துடன் வெளியாகியுள்ள விளம்பரத்தில், "கண் இமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; எந்த சிதறலும் இல்லாமல் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்" என விழிப்புணர்வு வரிகள் இடம் பெற்றுள்ளன.

புதிய முயற்சி:
தங்களது இந்த முயற்சி குறித்து வதோதரா போலீஸ் கமிஷ்னர் மனோஜ் சஷிதர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், " எந்த ஒரு செய்தியையும் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்றால், அவர்களிடம் பிரபலமாக உள்ள விஷயத்தை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் தான் நடிகர்களின் படங்களை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்துள்ளோம். இதற்கு நல்ல பயன் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை போலீசார்:
வதோதரா போலீசாரின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக மும்பை மற்றும் பெங்களூரு போலீசாரின் சமூக ஊடக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மாறுவேடத்தில் பிரச்சாரம்:
தமிழகத்திலும் கூட போக்குவரத்து போலீசார் எமதர்மன் வேடத்தில் அவ்வப்போது விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications