For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய், மோடியின் வாழ்க்கை வரலாறு: ராஜஸ்தான் பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெறுகிறது

By Veera Kumar
Google Oneindia Tamil News

Vajpayee, modi to be in school syllabus soon
ஜெய்ப்பூர்: பாஜக முன்னணி தலைவர்களான வாஜ்பாய், நரேந்திரமோடி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு பள்ளியில் பாடமாக வர உள்ளது.

இதுபற்றி ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காளிசரண் சரப் கூறியதாவது:

வாஜ்பாய் மற்றும் மோடி குறித்த பாடங்களை மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்களே தவிர பிறகட்சி தலைவர்களுக்கு அந்த கவுரவம் கிடைக்கவில்லை.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மிகச்சிறப்பாக பணியாற்றினார். ஆனால் அவர் காங்கிரஸ்காரர் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஒரு பாடத்திட்டத்திலும் வாஜ்பாய் குறித்து சேர்க்கப்படவில்லை.

மோடி பிரதமரானதும், ராஜஸ்தான் பாடத்திட்டத்தில் வாஜ்பாய் மற்றும் மோடி சேர்க்கப்படுவார்கள். மோடி தனது இளமைக்காலங்களில் பட்ட கஷ்டங்களை எல்லாம் பாடத்திட்டத்தில் சொல்லிக்கொடுத்தால் மாணவர்களுக்கு அது உத்வேகத்தை கொடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அர்ச்சனா சார்ம் கருத்து கூறுகையில்; எப்போதெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை புகுத்தப்பார்க்கிறது. பாடத்திட்டத்தில் 2002ம் ஆண்டு கலவரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

English summary
Rajasthan education minister Kali Charan Saraf planning to introduce a chapter on Modi’s ‘life and struggles’ in the school curriculum as soon as he gets the top job.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X