தேர்தலுக்கு முன்னதாகவே... நான் வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள்... மோடி பேச்சு
வாரணாசி: தேர்தலுக்கு முன்னதாகவே, நான் வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள் என்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி, பிரதமரின் வேட்புமனுவை காவலாளி ஒருவரும், மகளிர் கல்லூரி முதல்வரும் முன்மொழிந்தனர். வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர்.

கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இந்தமுறை வாரணாசியில் மட்டும் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வாரணாசி தொகுதி மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி, 5 ஆண்டுகளுக்கு பிறகு என்னை மீண்டும் ஆசீர்வதிக்கின்றனர் என்றார்.
அதற்கு எடுத்துக்காட்டாக, நேற்று நடந்த ரோடு ஷோ இருந்தது. நான் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாக மக்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்த மோடி, வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவது பெருமிதமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக பேசிய மோடி, முதன்முறையாக அரசுக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசுவதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக நேர்மையுடன் தனது கடமையை நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications