வருண் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி: 3 துப்பாக்கிகளும் கூட

Subscribe to Oneindia Tamil

மும்பை: பாஜக தலைவர் வருண் காந்தியிடம் ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 3 துப்பாக்கிள் உள்ளன.

பாஜக தலைவர் வருண் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களை தெரிவித்தார்.

அவரது சொத்து மதிப்புகளை பார்ப்போம்.

ரூ.20 கோடி

ரூ.20 கோடி

வருண் காந்தியிடம் ரூ.19.96 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அதில் ரூ. 11.88 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் அவரது மனைவி யாமினியின் பெயரில் உள்ளது.

வங்கி

வங்கி

வங்கியில் வருண் பெயரில் ரூ. 11 கோடி பணம் உள்ளது. மேலும் அவர் பங்குகள், பாண்டுகள் உள்ளிட்டவற்றில் ரூ.3.33 கோடி முதலீடு செய்துள்ளார். தேசிய சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ரூ.31.53 லட்சம் போட்டுள்ளார். யாமினியின் பெயரில் வங்கியில் ரூ. 3.63 லட்சம் உள்ளது.

துப்பாக்கி

துப்பாக்கி

வருண் காந்திக்கு துப்பாக்கிள் என்றால் பிடிக்குமாம். அவர் பெயரில் மூன்று துப்பாக்கிகள் உள்ளன. அவரிடம் வாகனம் எதுவும் இல்லை. ஆனால் டெல்லியில் ஒரு வீடு மட்டும் உள்ளது.

தங்கம்

தங்கம்

வருண் காந்தியிடம் 1334.5 கிராம் தங்கம் மற்றும் 113.78 கிலோ வெள்ளி உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்தபோதும் அவரிடம் இதே அளவு தங்கம், வெள்ளி தான் இருந்தது. அவரது பெயரில் விவசாய நிலமோ, பூர்வீக சொத்தோ இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+