குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம்.. டெல்லி ஹைகோர்ட்
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம் என டெல்லி ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
டெல்லி: குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் கார்களில் நம்பர் பிளேட் அவசியம் என ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
குடியரசுத் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள், கண்ணுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தது. அதில் குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், கவர்னர்கள், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட அலுவலக வாகனங்கள், மோட்டார் வாகனச்சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை.

பறிமுதல் செய்ய வேண்டும்
அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு வாகன பதிவெண்கள் வெளியில் தெரியும்படி கார்களில் வைக்கப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசு பதில்
இதையடுத்து இதுகுறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பதிவு செய்யப்பட வேண்டும்
அதில் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், கவர்னர்கள், வெளியுறவுத் துறை அமைச்சக வாகனங்கள் அனைத்தும், வாகன போக்குவரத்து சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து, தொடர்புடைய அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்களில் தெரியும்படி
இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், துணை குடியரசு மற்றும் அவரது மனைவி உட்பட, தங்கள் அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பதிவெண்கள், கார்களில் தெரியும்படி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

விரைவில் பதிவு செய்யப்படும்
வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியா வரும்போது, அவர்கள் பயன்பாட்டுக்காக, 14 கார்கள் உள்ளதாகவும், அவை, விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
எனவே குடியரசுத் தலைவர் துணை குடியரசுத் தலைவர், கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் அவர்களது அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அந்த எண் வெளியில் தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications