உடல் எடையை குறைச்சிட்டு கட்சி வெயிட்டை கூட்டுங்க... ரேணுகா சவுத்ரிக்கு வெங்கய்யா நாயுடு அட்வைஸ்!
Recommended Video

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரேணுகா சவுத்ரியைப் பார்த்து ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு உடல் எடையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்யசபாவில் தனது பதவிக்காலம் முடிவதையொட்டி காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ரேணுகா சவுத்ரி தனது இறுதி உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் வெங்கய்ய நாயுடு என்னை நீண்ட காலமாக அறிந்தவர், அதாவது நான் இதைவிட பருமனாக இருந்த போதிலிருந்தே அவருக்கு என்னை தெரியும்.
என் உடல் எடையைப் பற்றி பலரும் பேசுகின்றனர். ஆனால் என்னுடைய பணியைக் பொருத்தவரை பலத்தைப் பிரயோகப்படுத்தியே காரியங்களை சாதிக்க வேண்டி இருக்கிறது என்று பேசினார்.

வெங்கய்ய நாயுடு அட்வைஸ்
ரேணுகா சவுத்ரியின் இந்த பேச்சுக்கு பதிலளித்த வெங்கய்ய நாயுடு, உங்களுக்கு என்னுடைய எளிமையான ஆலோசனை இது தான். நீங்கள் உடல் எடையை குறைத்துக் கொண்டு கட்சியின் எடையைக் கூட்டுங்கள் என்றார்.

காங்கிரஸ் சிறப்பாக இருக்கிறது
வெங்கய்ய நாயுடுவுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த ரேணுகா சவுத்ரி காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே இருக்கிறது என்றார். காங்கிரஸ் எப்போதுமே தாழ்ந்து விடாது என்றும் குறிப்பிட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு
ரேணுகா சவுத்ரி, வெங்கய்ய நாயுடு உரையாடலால் ராஜ்யசபாவில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய ரேணுகா சவுத்ரி ராஜ்யசபாவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 11 சதவீதம் மட்டுமே இருக்கிறது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சூர்ப்பணகையுடன் ஒப்பிட்ட பிரதமர்
கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். இதற்கு ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு ஆட்சேபணை தெரிவித்த நிலையில், பிரதமர் குறுக்கிட்டு ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என்றார்.

குடியரசு துணைத் தலைவர் இப்படி பேசலாமா
பிரதமர் மோடி ரேணுகா சவுத்ரியை ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு தான் இவ்வாறு பேசினார் என்று சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்தது. ராஜ்யசபாவில் நகைச்சுவையாக நடந்த விவாதமாகவே இருந்தாலும் குடியரசு துணைத் தலைவர் ஒரு பெண்ணைப் பார்த்து உடல் எடை குறித்து இப்படி பேசியது அவருடைய பொறுப்பிற்கு அழகல்ல என்று சில எம்பிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications