கேரளா, கர்நாடகாவில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
கர்நாடகா, கேரளாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி: கர்நாடகா, கேரளாவில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை வெளுத்து வருகிறது.
இதனால் கேரள மாநிலம் வெள்ளக்காடாகியுள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 90க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அணைகள் திறப்பு
நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிவதால் திறக்கப்பட்டுள்ளன.

நீர் திறப்பு
இதேபோல் கர்நாடகாவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை பெய்யும்
இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

படிப்படியாக குறையும்
தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாநிலங்களில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இன்று முதல் மழை குறையும் என கூறப்பட்டிருப்பது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications