பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
பாஜகவின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட எல்.கே.அத்வானிக்கு அவரது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 26ம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் எல்.கே.அத்வானியில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருந்த எல்கே அத்வானிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இரவு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை டாக்டர் வினித் பூரி தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜக மூத்த தலைவர் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக தலைவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்து வருகிறார்கள்..
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications