குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய விழாவில் இந்து மதத்திற்கு மாறிய 225 கிறிஸ்தவர்கள்!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர்.

விஸ்வ இந்து பரிஷத் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் அரணை கிராமத்தில் சனிக்கிழமை கர் வாப்சி என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினர். அவர்களுக்கு பகவத் கீதை பரிசளிக்கப்பட்டது.

VHP 're-converts' 225 Christians to Hinduism

அந்த 225 பேரும் இந்துவாக மாறும் முன்பு அவர்களை பரிசுத்தமாக்க மஹா யாஞ்ன்யா என்ற யாகம் நடத்தப்பட்டதாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் நாது பட்டேல் தெரிவித்தார்.

இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அசோக் சர்மா கூறுகையில்,

கர் வாப்சி நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதம் மாறுமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அந்த 225 பேரும் அவர்களாக தான் மதம் மாறினார்கள் என்றார்.

முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடத்தப்பட்ட கர் வாப்சி நிகழ்ச்சியின்போது 100 முஸ்லீம்கள் இந்து மதத்திற்கு மாறினர். அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றியதாக சர்ச்சை கிளம்பியது.

இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி ராஜ்யசபாவில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் குஜராத்தில் 225 கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+