கோயில் தூண்களுக்கு நடுவே சிக்கிய பாஜக எம்எல்ஏ! "இதெல்லாம் நமக்கு தேவையா!" நக்கலடிக்கும் நெட்டிசன்கள்
போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் கோயிலில் வசமாகச் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசே ஆட்சியில் இருக்கிறது. அங்கே இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது.
கடந்த தேர்தலிலேயே அங்கே பாஜகவால் மெஜாரிட்டி பிடிக்க முடியவில்லை. சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்த பிறகே அங்கு பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்தது.

மத்தியப் பிரதேசம்: இந்தச் சூழலில் தான் இந்தாண்டு அங்கே தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே இணையத்தில் இப்போது வீடியோ ஒன்று திடீரென டிரெண்டாகி வருகிறது. அதில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் கிராம பாஜக எம்எல்ஏ திலீப் மக்வானா கோயிலின் இரண்டு தூண்களுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறார். இரண்டு தூண்களுக்கு நடுவே சிக்கி வெளியே வர முடியாமல் திணறும் அவரது வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை வைத்து நெட்டிசன்கள் பலரும் பாஜக எம்எல்ஏவை நக்கலடித்து வருகின்றனர். அதேநேரம் இது இப்போது நடந்த சம்பவம் இல்லை இது பழைய வீடியோ என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று என கூறப்படுகிறது.
தூண்கள்: இந்த வீடியோ குணவாட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிவசக்தி கோவில் எடுக்கப்பட்டது. இந்த கோயிலில் அமைந்துள்ள தூண்களின் வழியாகப் பாவமும் புண்ணியத்திற்கும் கணக்கிடப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சிவன் கோவிலில் இரண்டு பெரிய தூண்கள் உள்ளன. அவை பாவ- புண்ணியத்தின் தூண்களாகக் கருதப்படுகின்றன. இந்த இரண்டு தூண்களுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் சிறியது. இருப்பினும், இதற்கு நடுவே விரைவாகச் செல்வோர் ஒரு நல்ல ஆன்மா எனக் கருதப்படுவார்.
அதேநேரம் தூண்களுக்கு நடுவே சிக்கிக் கொள்பவர் பாவம் செய்தவராகக் கருதப்படுவார். இதன் காரணமாகவே பழைய வீடியோவை இப்போது டிரெண்ட் செய்து பாஜக எம்எல்ஏவை நக்கலடித்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது மட்டுமின்றி அங்கே அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் சொன்ன பல வீடியோக்கள் கருத்துகளையும் இப்போது எடுத்து விமர்சித்து வருகின்றனர்.

ரத்லம் ரூரல் எம்எல்ஏவாக உள்ள திலீப் மக்வானா மக்களிடையே அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறார். எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பாஜக தொண்டர்களே திலீப்பின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் விமர்சனம்: இதனால் இந்தாண்டு தேர்தலில் திலீப்பிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் இந்த வீடியோவை காங்கிரஸ் நிர்வாகிகள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர் செய்த பாவத்தாலேயே நடுவே மாட்டிக் கொண்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், இது புதிய வீடியோ இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திலீப் மக்வானா தனது நண்பர்களுடன் இந்த சிவன் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கே வழிபாடு செய்துவிட்டு, அவர் தூண்களுக்கு நடுவே வர முயன்ற போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதை அங்கே இருந்த சிலர் வீடியோ எடுத்து அப்போது இணையத்தில் பகிர்ந்ததிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகும் நெட்டிசன்கள் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications