புவியீர்ப்பு விசை கூட புல்லரித்துப் போயிருக்கும் மெக்கல்லத்தின் "கேட்ச்"சைப் பார்த்து....!
பெங்களூர்: பெண்களிடம் வயதைக் கேட்கக் கூடாது என்பார்கள்.. அதேபோல விளையாட்டு வீரர்களிடமும் கூட வயதைப் பற்றி... ம்ஹூம்.. மூச்சே விடக் கூடாது.. எப்படிப்பட்ட வயதில் இருந்தாலும் அசத்துவதில் விளையாட்டு வீரர்களுக்கு நிகர் அவர்கள்தான். அந்த வகையில் 32 வயது பிரண்டன் மெக்கல்லம், நேற்று டால்பின்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு சிக்ஸரைத் தடுத்துப் பிடித்த விதம் அசத்தி விட்டது.
32 வயது என்பது விளையாட்டு உலகில் தாத்தா வயது போல. ஆனால் இந்த வயதிலும் தரையை விட்டு நன்றாக மேலே எம்பி அவர் பிடித்த கேட்ச் இருக்கிறதே.. அடடா... பிரமாதம் போங்க.
சென்னை சூப்பர் கிங்ஸ், டால்பின்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போதுதான் இந்தக் காட்சியைக் காண நேர்ந்தது.

சின்னச்சாமி ஸ்டேடியத்தில்
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், டால்பின்ஸ் அணியும் நேற்று நடந்த போட்டியில் மோதின. இதில் சென்னை வெற்றி பெற்றது.

அதிரடி பேட்டிங்
இப்போட்டியில் சென்னையின் சுரேஷ் ரெய்னா்வும், மெக்கல்லமும் அபாரமாக ஆடினர். ரெய்னா 43 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். அதேபோல மெக்கல்லம் 29 பந்துகளில் 49 ரன்களைக் குவித்தார். இறுதியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது.

அக்ரோபாட்டிக்ஸ் மெக்கல்லம்
எல்லாவற்றையும் விட நேற்று டால்பின்ஸ் அணி வீரரின் ஒரு சிக்ஸரை மெக்கல்லம் தடுத்துப் பிடித்து மீட்டு வந்ததுதான் பெரிய ஹைலைட்டாக இருந்தது.

16வது ஓவரில்
டால்பின்ஸ் அணியின் ராபி பிரைலிங் பேட் செய்து கொண்டிருந்தார். அது 16வது ஓவர். பந்தை வீசியது வேயன் பிராவோ. அவர் வீசிய பந்தை ராபி அபாரமாக தூக்கி அடித்தார். அது நல்ல உயரத்தில் போய் எல்லைக் கோட்டைத் தாண்டி விழப் போனது.

அலேக் ஜம்ப்....!
பந்து தான் இருக்கும் பகுதியை நோக்கி சிக்ஸருக்குள் விழப் போவதைப் பார்த்த மெக்கல்லம் சுதாரித்தார். பந்து எல்லைக் கோட்டுக்கு அருகே வந்தபோது அப்படியே ஒரு ஜம்ப் செய்து ஒரு கையால் அலேக்காகப் பிடித்தார்.

உள்ளே போ!
பிடித்த பந்துடன் பேலன்ஸ் தடுமாறி அப்படியே வெளியே போய் விழுந்தார். ஆனால் விழுவதற்குள் பிடித்த பந்தை தூக்கி உள்ளே எறிந்து விட்டார்.

சபாஷு சபாஷு.. தட்டிக் கொடுத்த ஜடேஜா
மெக்கல்லின் ஏரோபிக்ஸ் வேலைகளைப் பார்த்து அரண்டு போன அருகில் நின்றிருந்த ரவீந்திர ஜடேஜா ஓடி வந்து மெக்கல்லத்தைக் கட்டிப்பிடித்து தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.

இப்ப இது வைரல் பாஸ்!
இப்போது மெக்கல்லத்தின் இந்த அபாரமான சிக்ஸர் தடுப்பு வீடியோ வைரல் போல பரவிப் பெருகி விட்டது. உண்மையிலேயே அபாரமான பீல்டிங் இது என்பதில் சந்தேகமே இல்லை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications