அடடே.. ஜம்மு காஷ்மீர் மாநில முதல் துணை நிலை ஆளுநராக போவது யார் தெரியுமா?
ஸ்ரீநகர்: தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் துணை நிலை ஆளுனராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1975ம் ஆண்டு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார், தென்மண்டல ஐஜியாக பதவி வகித்தபோது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளில் உச்சத்தில் இருந்த ஜாதி கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றினார்.

சந்தனக் கடத்தல் மன்னன், வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, இவரது தலைமையிலான அதிரடிப்படையினர்தான் வீரப்பனை சுட்டுக் கொன்றனர். இதனால் நாடு முழுக்க புகழ் பெற்றவர் விஜயகுமார்.
2010 ல் சத்தீஸ்கரில் உள்ள டன்டேவாடாவில் நடந்த நக்சலைட் தாக்குதலில் 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து விஜயகுமார் சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரலாக (டிஜி) நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் இப்பகுதியில் நக்சலைட் நடவடிக்கைகள் பெரிதும் குறைத்து ஒடுக்கப்பட்டன.
தற்போது, விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் ஆளுனர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பட ஆரம்பிக்கும்.
அதில், ஜம்மு காஷ்மீர் முதல் துணை நிலை ஆளுநராக விஜயகுமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல பீகாரை சேர்ந்த 1974ம் ஆண்டு கேரளா பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்வர் ஷர்மா பெயரும் இதே பதவிக்கான போட்டியில் உள்ளது.
மத்திய உளவுப் பிரிவின் முன்னாள் தலைவர் இவர். காஷ்மீர் குறித்த ரகசிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்கும் பொறுப்பில்தான் இப்போதும் உள்ளார்.
வனப்பகுதிகளில் நக்சல் நடவடிக்கைகளை கண்டறிவது, ஒடுக்குவது போன்றவற்றில் திறமையானவர் விஜயகுமார் என்பதால், அவருக்குதான், ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications