கடன் பிரச்சினை.. விஜய் மல்லையா பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றது மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் முடக்கியுள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்து 3 முறை நோட்டீஸ் அனுப்பியும், நேரில் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வங்கிகளில் சுமார் 8 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாத மல்லையா, தற்போது லண்டனில் வசிக்கிறார். அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி, அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. மல்லையா இதுவரை ஆஜராகவில்லை.
வங்கிகள் தொடர்ந்த வழக்கில் மல்லையாவுக்கு மும்பை சிறப்பு நீதிபதி பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் மல்லையா பாஸ்போர்ட்டை வெளியுறவு அமைச்சகம் இன்று முடக்கி, திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. எனவே அவர் பாஸ்போர்ட் இனி செல்லாது. அத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இதை இன்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications