இந்தியாவிலிருந்து எஸ்கேப் ஆன விஜய் மல்லையாவின் எம்.பி. பதவி பறிப்பு !
டெல்லி: வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக வெளிநாட்டில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இழக்கிறார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன.

அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. தற்போது விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவை நெறிக் குழு கூட்டம் அதன் தலைவர் கரண் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத விவகாரம் தொடர்பாக விஜய் மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் மல்லையாவின் கருத்தை அறியும் வகையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் அடுத்தக் கூட்டத்தில் விஜய் மல்லையாவை நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
விஜய் மல்லையா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும், 2010 ராஜ்யசபா இடைத்தேர்தலின்போது, மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் எம்.பியாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications