மோடியின் ராஜ்கோட் தொகுதியிலேயே 'தக்கி முக்கி' கரைசேர்ந்த பாஜக "முதல்வர்"
2002-ல் பிரதமர் மோடி வென்ற ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜயரூபானி தட்டு தடுமாறி வென்றிருக்கிறார்.
Recommended Video

ராஜ்கோட்: குஜராத் முதல்வர் விஜய ரூபானி தட்டு தடுமாறி கடைசியாக 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் வென்றுள்ளார். இந்த ராஜ்கோட் மேற்கு சட்டசபை தொகுதியில்தான் 2002-ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குஜராத் தேர்தலில் ராஜ்கோட் மேற்கு சட்டசபை தொகுதியில் முதல்வர் விஜய ரூபானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜ்கோட் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இந்திரனில் ராஜிகுருவை காங்கிரஸ் களமிறக்கியது.
இத்தொகுதி 32 ஆண்டுகாலமாக பாஜக வசமுள்ள தொகுதி. 2002-ல் நரேந்திர மோடி போட்டியிட்டு வென்ற தொகுதியும் கூட.

ஹர்திக் தீவிர பிரசாரம்
ராஜ்கோட் தொகுதியைப் பொறுத்தவரையில் பட்டேல்கள் செல்வாக்குள்ள தொகுதி. இங்கு ஹர்திக் பட்டேல் படுதீவிர பிரசாரம் செய்தார்.

பட்டேல்கள் ஓட்டுகள்
முதல்வர் விஜய ரூபானிக்கு எதிராக இந்திரனில் இறக்கப்பட்டதற்கு காரணமே அத்தொகுதியில் உள்ள 25,000 பிராமணர் வாக்குகளை குறிவைத்துதான். 75,000 பட்டேல்கள் வாக்குகளும் இத்தொகுதியில் உள்ளன.

வென்றார் முதல்வர்
இதன்விளைவைத்தான் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் விஜய் ரூபானி அனுபவிக்க நேரிட்டது. 21,000 வாக்குகளில் விஜய் ரூபானி வென்றதாக அறிவிக்கப்பட்டதாக இருந்தாலும் போராடித்தான் இங்கு அவர் ஜெயித்திருக்கிறார்.

பரிதாப பாஜக
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் ஒரு கட்டத்தில் 6,234 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் ரூபானி பின் தங்கியிருந்த அளவுக்கு நிலைமை கேவலமாக இருந்தது. மோடி போட்டியிட்டு வென்ற தொகுதியில் கரைசேர பாஜக பெரும் போராட்டம் நடத்தியிருப்பதுதான் பரிதாபம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications