For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா மலை கிராம மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்த விஜய் வருவாரா?: உமா கேசவன் ஐஏஎஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாலக்காடு: கேரளாவில் மலை கிராம மக்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டு வர, நடிகர் விஜய்யை அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட சப் கலெக்டர் உமா கேசவன் ஐ.ஏ.எஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்களை கொண்ட மாநிலம் கேரளா. அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக திரையரங்குகளில் பல விஜய் படங்கள் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் விஜய்க்கு சிலை வைக்கும் அளவிற்கு பிரபலம்

Vijay's reach in Kerala is sky high -Umesh Kesavan IAS

கேரளா பாலக்காட்டில் சப் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் உமேஷ் கேசவன். அவர் சமீபத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் அட்டப்பாடி பகுதிக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார். அங்கு சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவை படியுங்களேன்

"பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார்.

அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள்.

தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.

அரசாங்கம் ஒதுக்கிய கோடிக்கணக்கான பணத்தில் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. அவர்களைச் சென்றடைந்திருக்கும் ஒரே விஷயம் 'விஜய்' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வை கொண்டு வர, விஜய்யை இங்கு அழைத்து வர அவரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் உமேஷ் கேசவன். கேரளாவிற்கு விஜய் வருவாரா?

English summary
The Attapady tribal block of Palakkad district People watch Vijay movies and songs in Tamil channels all the time. Crores and crores of social welfare funds had not reached that untouched remote hamlet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X