'சைட் டி'ஷ்ஷை டெல்லியிலேயே விட்டு விட்டு தனியாக கிளம்பி வந்த 'கேப்டன்'...!
டெல்லி: டெல்லிக்கு மனைவி, மச்சான் மற்றும் கட்சி எம்.எல்.ஏக்களுடன் கிளம்பிச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், வரும்போது எம்.எல்.ஏக்களை டெல்லியிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் அவர்கள் தாறுமாறாக டென்ஷனாகி விட்டனராம்.
நம்மை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இவர், வேலைக்காரர்கள் என்று நினைத்து விட்டாரா என்று அவர்கள் கோபமடைந்துள்ளனராம்.
டெல்லியில் எம்.எல்.ஏக்களை விட்டு விட்டு தனது மனைவி, மச்சானுடன் சென்னைக்கு விஜயகாந்த் மட்டும் கிளம்பி வந்த தகவல், அவர் இங்கு சென்னை விமான நிலையத்தில் கொடுத்த பிரஸ் மீட்டுக்குப் பிறகுதான் டெல்லியில் பாவமாக உட்கார்ந்திருந்த எம்.எல்.ஏக்களுக்கேத் தெரிய வந்ததாம்.

வாங்கப்பா டெல்லிக்குப் போகலாம்
டெல்லிக்கு 13ம் தேதி போனார் விஜயகாந்த். அதற்கு முதல் நாள்தான் அவரது கட்சியில் எஞ்சியுள்ள 20 எம்.எல்.ஏக்களுக்கும் டெல்லி போகும் தகவலே தெரிவிக்கப்பட்டதாம்.

தமிழ்நாடு இல்லத்தில் போய்த் தங்கிக்கோங்க
தன்னுடன் வந்த எம்.எல்.ஏக்களை தமிழ்நாடு இல்லத்தில் போய்த் தங்கிக் கொள்ளுமாறு கூறி விட்டாராம் விஜயகாந்த். இது தமிழக அரசு நடத்தும் இல்லமாகும். பின்னர் அவர் தனது மனைவி, மச்சானுடன் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார்.

நீ தனியே.. நான் தனியே
பின்னர் பிரதமரைச் சந்திக்கும்போதுதான் எம்.எல்.ஏக்களைப் பார்த்தாராம். ஆனால் ஆலோசனையெல்லாம் நடத்தவில்லையாம். பிரதமருடன் சேர்ந்து குரூப் போட்டோவுக்கு சிரிக்க வைத்து போட்டோ எடுத்தோடு சரியாம். பிறகு தன் பாட்டுக்கு ஹோட்டலுக்குப் போய் விட்டாராம்.

நாங்க கெளம்புறோம்
அதன் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய எம்.எல்.ஏக்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதனால் சிலர் நாங்கள் அவசரமாக கிளம்புவதாக கூறி சென்னைக்குப் போய் விட்டனராம். சிலர் மட்டும்தான் தொடர்ந்து தேவுடு காத்திருந்துள்ளனர்.

ரைட்டு...
இந்த நிலையில் திடீரென விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், மச்சான் சுதீஷ் ஆகியோர் மட்டும் விமானத்தைப் பிடித்து சென்னைக்குப் போய் விட்டனராம். கேப்டனுடன் சென்னை செல்லலாம் என்று ஆவலோடு காத்திருந்த எம்.எல்.ஏக்களுக்கு இது தெரியாது.

அடடே.. எஸ்கேப் ஆயிட்டாரே
ஆனால் சென்னைக்குப் போய் அங்கு செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேட்டி கொடுத்த பின்னரே அவர் கிளம்பிப் போன தகவல் டெல்லியில் உட்கார்ந்திருந்த எம்.எல்.ஏக்களுக்குத் தெரிய வந்ததாம். இதைக் கேள்விப்பட்டு டென்ஷனாகி விட்டார்களாம் அவர்கள்.

வெறும் விளம்பரத்திற்காகவா...
மேலும் டெல்லிக்கு விஜயகாந்த் போனதே வெறும் பப்ளிச்சிட்டிக்காக என்று தேமுதிகவினரே கூறுகிறார்கள். திமுக மாநாட்டுச் செய்திக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதே விஜயகாந்த்தின் டெல்லிப் பயணத்தின் லட்சியமாகும் என்று அவர்கள் முனுமுனுக்கிறார்கள்.
என்னவோ எதுவுமே புரியலையே..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications