"விஜயகுமார் ஆபரேஷன்".. லஷ்கர் அமைப்பின் டாப் தீவிரவாதி என்கவுண்டர்.. அதிகாலையில் குலுங்கிய காஷ்மீர்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பல காலமாக தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நதீம் அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஜம்முவில் உள்ள விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து விமானப்படைத்தளத்தில் இரண்டு டிரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ராணுவம் மற்றும் போலீஸ் தீவிர தேடுதல் வேட்டைகளில் இறங்கி உள்ளது. சிஆர்பிஎப் படை வீரர்கள் பல்வேறு முக்கிய பாதுகாப்பு ஆபரேஷன்களில் இறங்கி உள்ளனர்.

கைது
இந்த நிலையில்தான் காஷ்மீர் ஐஜிபி விஜயகுமார் உத்தரவின் பெயரில், நேற்று காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. உளவுத்துறை மூலம் பல முக்கிய தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து நேற்று சிஆர்பிஎப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் காஷ்மீரின் மல்ஹூரா பரிம்போரா என்ற பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

சோதனை
நேற்று முதல்நாள் மாலை நடத்தப்பட்ட சோதனையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நதீம் அப்ரார் பாதுகாப்புப்படை வீரர்களால் கைது செய்யப்பட்டார். அங்கு வீடு ஒன்றில் பதுங்கி இருந்த நதீம் அப்ரார் கைது செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை நதீம் அப்ராரை அவர் வழக்கமாக பதுங்கி இருக்கும் இன்னொரு இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணை
நதீம் அப்ராரின் கூட்டாளிகளை கண்டுபிடிக்கும் விதமாக இவரை அழைத்து செல்லும் போது மல்ஹூரா பரிம்போரா அருகே பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலையில் சுமார் 1 மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

சண்டை
இந்த சண்டை அந்த பகுதியில் குடியிருப்புக்கு அருகே நடந்ததால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சண்டையின் முடிவில் வந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நதீம் அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இன்னொரு பாகிஸ்தான் தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை ராணுவ அதிகாரிகளும் , உளவு அமைப்புகளும் பல நாட்களாக தேடி வந்தன.

தேடல்
பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் நதீம் அப்ராருக்கு தொடர்பு உள்ளது. பாதுகாப்பு படை அதிகார பயாஸ் அகமது மற்றும் அவரின் குடும்பத்தினரை கொன்ற வழக்கு உட்பட பல்வேறு புகார்கள் நதீம் அப்ரார் மீது சுமத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதலின் மாஸ்டர் மைண்டாக நதீம் அப்ரார் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications