தெலுங்கானாவில் பப்பு வேகலை... தமிழக அரசியலுக்கு வரும் விஜயசாந்தி- சசியுடன் சந்திப்பு
தமிழக அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப் போகிறார் நடிகை விஜயசாந்தி, சசிகலாவை சிறையில் சந்தித்து பேசியுள்ளார்.
பெங்களூரு : தமிழக அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறார் நடிகை விஜயசாந்தி, முதற்கட்டமாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். டிடிவி தினகரனுடனும் பேசி தமிழக அரசியல் பற்றி விவாதித்துள்ளார் விஜயசாந்தி.
தெலுங்கு, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோயினாக வலம் வந்தவர் விஜயசாந்தி. கடந்த 1980களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிரடி ஆக்சன் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், நடிப்பில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அரசியல் ஆசை
50 வயதாகும் விஜயசாந்தி, அரசியல் ஆசையில் தல்லி தெலுங்கானா என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் இணைந்தார் விஜயசாந்தி.

லோக்சபா எம்.பி
மேடக் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனித் தெலுங்கானா அமைய வேண்டும் தீவிரமாக போராட்டங்களில் பங்கேற்றவர் விஜயசாந்தி. சந்திரசேகர் ராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அதிமுக சசிகலா அணி
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார். சசிகலா முதல்வராகவேண்டும் என்று பேட்டியே கொடுத்திருக்கிறார்.

சசியுடன் சந்திப்பு
இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் கடந்த திங்களன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்துச் சென்றார். இவரைத் தொடர்ந்து சசிலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விஜயசாந்தியும் அவரை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.

சசிகலா அழைப்பு
அப்போது அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. சுமார் 40 நிமிடம் வரை இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்போது விஜயசாந்தியை தமிழக அரசியலுக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்ததாக தெரியவந்துள்ளது.

தினகரனுடன் சந்திப்பு
இதன் காரணமாக விஜயசாந்தி தமிழக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனையும் விஜயசாந்தி சந்தித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.

முதல்வர் நாற்காலி
ஆந்திரா, தெலுங்கானாவில் பப்பு வேகாத நிலையில் தமிழக அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறார் விஜயசாந்தி. வாங்கம்மா வாங்க... இன்னும் எத்தனை பேருக்கு தமிழகத்தின் முதல்வர் நாற்காலி மீது ஆசையிருக்கோ எல்லாரும் வந்து மல்லுக்கட்டுங்க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications