ஆத்தி.. எங்க இருந்து வருதுனு தெரியலயே..சீறி வந்த கற்கள்! தெறித்து ஓடிய பாஜக வேட்பாளர்! என்னாச்சு?
கொல்கத்தா: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மேற்கு வங்காளத்தில் ஜார்கிராம் எம்பி தொகுதி பாஜக வேட்பாளரை கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து ஜூன் 1ஆம் தேதி 7 மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடக்கிறது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று பலத்த பாதுகாப்புடன் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.
மக்களவை தேர்தல்: ஏற்கனவே 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, ஏப்ரல் 13, மே 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 25ஆம் தேதியான நேற்று 6ஆம் கட்டத் தேர்தலை காங்கிரஸ் - பாஜக கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் எதிர்கொண்டன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.
6ஆம் கட்ட தேர்தல்: ஆறாம் கட்ட தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் பத்து தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கும், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் நான்கு ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு என காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணிக்கு நிறைவடைந்தது.
மேற்கு வங்கம்: குறிப்பாக பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வரும் டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று நல்ல வாக்கு சதவீதமும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கிராமத்திற்கு சென்ற பாஜக வேட்பாளரை அக்கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கிராம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான பிரணாத் துடு அந்த தொகுதிக்குட்பட்ட மோங்க்லபோட்டா வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு குறித்து ஆய்வு நடத்து சென்றார்.
கற்களை வீசி தாக்குதல்: அப்போது திடீரென சில மர்ம நபர்கள் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து சென்ற மத்திய பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பல்வேறு திசைகளில் இருந்தும் கற்கள் சீறி வந்ததோடு ஒரு கட்டத்தில் கும்பலாக சேர்ந்து கொண்டு வேட்பாளர் பிரணாத்தை தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து வேறு வழியின்றி அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாஜக புகார்: "அந்த வாக்குச்சாவடியில் பாஜக வாக்காளர்களை திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை இதை அடுத்து அங்கு நான் பார்வையிட சென்றபோது திரிணமுல் கட்சியினர் என்னை தாக்கினர்.. சிலர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு என்னை தாக்கினார்.. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாவிட்டால் என்னை கொன்று இருப்பார்கள்.. ஆனால் உள்ளூர் போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.. அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து செல்லும் வழியில் திரும்பவும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் என் கார் மீது செங்கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர் இதற்கெல்லாம் மம்தாவின் கட்சி தான் காரணம் எனக் கூறியிருக்கிறார்.
விளக்கம்: இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி, அமைதியான வாக்குப்பதிவை பிரணாத் சீர்குலைக்க முயன்றதாகவும் அப்பகுதிக்கு வந்த பாஜக வேட்பாளர், கிராம வாக்காளர்களை அச்சுறுத்தியதால் கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாஜகவினர்தான்" அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications