ஹரியானாவில் பாஜகவுக்கு நாக் அவுட்? காங்கிரசில் இணைகிறார் வினேஷ் போகத்! ரயில்வே பதவி ராஜினாமா
சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பிரபல மல்யுத்த வீரர் வினேஷ் போகத் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பொறுப்பை வினேஷ் இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
ஹரியானாவில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இந்த பிளானின் மாஸ்டர் மூவ்தான், வினேஷ் போகத்தை காங்கிரஸில் இணைப்பது. மல்யுத்த போட்டியில் பயிற்சி பெறும் பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை எழுப்பியதிலும், அதை போராட்டமாக மாற்றியதிலும் வினேஷ் போகத் பங்கு மிகப்பெரியது.

இந்த போராட்டத்தின் பின்னால், நாடே அணி திரண்டது. இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மறுபுறம் ஒலிம்பிக் போட்டியில், உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்திய போகத், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக எடை இருந்த காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்க பதக்கம் மிஸ்ஸானது. எல்லா விஷயத்திலும் போராடிய வினேஷ் மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இந்நிலையில்தான் அவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. இப்படி இருக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹரியானா வந்திருந்த ராகுல் காந்தியை வினேஷ் போகத் சந்தித்தார். அதனை தொடர்ந்து இன்று அவர் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், ரயில்வே துறையில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத் ராஜினாமா செய்திருக்கிறார்.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன. பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன.
மறுபுறம் ஜனநாய ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications