"அமிதாப் சாரிடம் நான் நடந்து கொண்டது தவறு! மன்னிச்சிடுங்க" Kaun Banega Crorepati சிறுவன் இஷிட் பட்!
காந்தி நகர்: கோன் பனேகா குரோர்பதி சீசன் 17 நிகழ்ச்சியில் வைரலான சிறுவன் இஷிட் பட் தற்போது மன்னிப்பு கோரியுள்ளான். மேலும் தான் செய்த தவறு மூலம் பாடம் கற்றுக் கொண்டதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
கோன் பனேகா குரோர்பதி சீசன் 17 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த 17 சீசன்களையும் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் அண்மையில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் குஜராத்தைச் சேர்ந்த இஷிட் பட் என்ற 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கலந்து கொண்டான். அமிதாப் பச்சன் கேள்விகளை கேட்டு முடிக்கும் முன்னரே பதிலை சொல்லி வந்தான்.
ஒரு கட்டத்தில் அமிதாப் பச்சனை ஆப்ஷன்களை கூட சொல்ல விடாமல் அந்த சிறுவன், "ஆப்ஷன் வேண்டாம், இதுதான் பதில், லாக் செய்யுங்கள்" என கூறினான். இது பலருக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராமாயணம் குறித்த ஒரு கேள்விக்கு இதே போல் ஆப்ஷனை கேட்காமலேயே தவறான பதிலை இஷிட் சொன்னான். இதனால் அந்த போட்டியை விட்டு இஷிட் பட் வெளியேற நேரிட்டது. இதையடுத்து இதற்குத்தான் இப்படி அவசரம் காட்டக் கூடாது என அவரை இணையத்தில் பலர் கடும் கிண்டலுக்குள்ளாகினான்.
அந்த சிறுவனை இணையதளவாசிகள் தொடர்ந்து மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வந்தனர். இந்த நிலையில் இஷிட் பட், இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதில் தனது கணக்கை தொடங்கியுள்ளான். இன்ஸ்டா பதிவில் இஷிட் பட் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளான்.
இது குறித்து அந்த சிறுவன் பதிவிடுகையில், "குரோர்பதி நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் பேசிய விதத்தால் பலர் காயமடைந்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.
ஒரு நிகழ்ச்சியில் எனது அணுகுமுறை தவறானது. திமிராக நடந்து கொள்வது எனது நோக்கம் அல்ல. அமிதாப் பச்சன் சாரையும் கோன் பனேகா குரோர்பதி குழுவினரையும் நான் மதிக்கிறேன். எனது தவறிலிருந்து ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். இனி நான் மிகுந்த பணிவாக நடந்து கொள்வேன் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.
இத்தனை பேர் இஷிட் பட்டை டிரோல் செய்தாலும் 10 வயதில் தைரியமாக ஒரு ரியாலிட்டி ஷோவில் அந்த சிறுவன் கலந்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பாருங்கள் என பலர் கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications