சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகள்- பாதுகாப்பு படை துப்பாக்கி சண்டை- வைரலாகும் வீடியோ
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் கொடூர தாக்குதல் நடத்தி 11 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தண்டேவடா வனப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மிக கொடூரமானது 76 பாதுகாப்பு படையினரை பலி கொண்ட 2010-ம் ஆண்டு தாக்குதல்தான். இதன்பின் 4 ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு சுக்மாவில் 15 பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டு அதே சுக்மாவில் மற்றொரு தாக்குதலில் மேலும் 12 துணை ராணுவப் படையினர் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். சுக்மாவில் துணை ராணுவப் படைக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 2017-ல் நடந்த மோதலில் 24 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 2018-ல் சுக்மாவில் மற்றொரு தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தினர். இதில் 9 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுக்மாவின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் நாட்டை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட்டு வருவதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருமிதமாக பேசி வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் 11 பாதுகாப்பு படையினரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்திருக்கின்றனர்.

இதனிடையே சத்தீஸ்கரில் தாக்குதலுக்குப் பின் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
#WATCH | Viral video surfaces showing moments after Dantewada Naxal attack in Chhattisgarh
— ANI (@ANI) April 27, 2023
(Source: Unverified) pic.twitter.com/6UXfOOhz5c

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications