ஏர்போர்ட்டில் அனுஷ்காவை இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த கோஹ்லி
மும்பை: புடபெஸ்ட் கிளம்பிய நடிகை அனுஷ்கா சர்மாவை வழியனுப்பி வைக்க மும்பை விமான நிலையத்திற்கு வந்த கிரிக்கெட் வீரர் கோஹ்லி அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் சேர்ந்துவிட்டார்கள் போன்று. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து கசப்புகளை மறந்து காதலை புதுப்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

உணவகம்
அண்மையில் கோஹ்லியும், அனுஷ்காவும் ஜோடி போட்டு இருமுறை உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை பெங்களூர் அணி வீழ்த்தியதை கோஹ்லி அனுஷ்காவுடன் சேர்ந்து கொண்டாடினார்.

சுல்தான்
அனுஷ்கா தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல நம்ம சல்மான் கான் தான். இந்த சுல்தான் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோஹ்லி அனுஷ்காவிடம் தெரிவிக்க அவர் அதை கேட்கவில்லை.

கோபம்
தான் அவ்வளவு கூறியும் சுல்தான் படத்தில் நடிக்க சென்றுவிட்டாரே என்று கோஹ்லி அனுஷ்கா மீது கோபமாக இருந்தார். தற்போது அந்த கோபம் தணிந்துவிட்டது போல. சல்மான் எவ்வளவு பெரிய ஸ்டார் அவர் படத்தை என்னால் விட முடியாது என அனுஷ்கா கோஹ்லியிடம் தெரிவித்திருந்தார்.

முத்தம்
சுல்தான் படத்தின் படப்பிடிப்பு புடபெஸ்ட்டில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுஷ்கா நேற்று இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் புடபெஸ்ட் கிளம்பினார். அனுஷ்காவை வழியனுப்பி வைக்க வந்த கோஹ்லி அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.


Click it and Unblock the Notifications
