கசப்பு கரைந்தது..."ஸ்வீட்"டுடன் டின்னர் சாப்பிட்டு காதலைப் புதுப்பித்த கோஹ்லி- அனுஷ்கா
மும்பை: காதல் முறிந்து விட்டதாகக் கருதப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் சேர்ந்து ரகசியமாக டின்னர் சாப்பிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். விராட் போட்டியில் தோற்றால் அதற்காக அனுஷ்காவை ரசிகர்கள் திட்டும் அளவிற்கு அவர்களது காதல் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

உடைந்தது காதல்...
அதனை நிரூபிப்பது போல், இருவரும் நேரில் சந்திப்பதைத் தவிர்த்தனர். சல்மான் கானின் சுல்தான் படத்தில் பிசியானார் அனுஷ்கா. மீண்டும் கோஹ்லியுடன் சேரும் பேச்சுக்கே இடமில்லை என அனுஷ்கா கறாராக அவரை புறக்கணிப்பதாக கூறப்பட்டது.

சமாதானத் தூது...
ஆனால், டி20 உலகக்கோப்பையில் அடுத்தடுத்து அதிரடி ஆட்டங்களால் ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்த விராட்டிற்கு அனுஷ்காவின் காதலை விட இயலவில்லை. அனுஷ்காவின் சகோதரர் மூலம் அவர் தொடர்ந்து சமாதானத் தூது அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

டிவிட்டரில் கோபம்...
அனுஷ்காவை பிரிந்தாலும் அவரை கிண்டல் செய்பவர்களை டிவிட்டரில் விளாசினார் கோஹ்லி. இதுவே அனுஷ்கா மீதான அவரது காதலை உறுதி செய்தது.

ரகசிய சந்திப்பு...
இந்நிலையில், இடையில் என்ன மாயம் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. மீண்டும் விராட் - அனுஷ்கா ஜோடி சமாதானம் ஆகியுள்ளனர். இருவரும் ரகசியமாக இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட்டு, தங்கள் காதலுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர்.

போட்டோக்கள் லீக்...
ஆனால், பிரபலங்கள் வாழ்க்கையில் ரகசியங்களைப் பொத்தி வைப்பது கடினமான விசயம். எப்படியோ இருவரும் ரகசிய விருந்துக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.

மீண்டும் வசந்தம்...
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசியதாகத் தெரிகிறது. இதன் மூலம் முந்தைய மனக்கசப்புகள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications