டைம் நாளிதழின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியல்.. கிங் கோஹ்லி இடம்பிடித்தார்!
பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டு இருக்கும் 2018ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இடம்பெற்று இருக்கிறார்.
டெல்லி: பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டு இருக்கும் 2018ம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி இடம்பெற்று இருக்கிறார்.
பிரபல டைம் நாளிதழ் வருடாவருடம், அந்த ஆண்டுக்கான உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும். அதற்கு முந்தைய வருடம் மிகவும் சிறந்து விளங்கியவர்களும், அந்த வருடம் மிகவும் சிறப்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்களும், உலகின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியவர்களும் இடம்பெறுவார்கள்.

இந்த வருடத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. வடகொரியா அதிபர் கிம், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாடெல்லா, நடிகை தீபிகா படுகோன், பாடகி ரிஹானா, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
இதில் கோஹ்லியும் இடம்பெற்று இருக்கிறார். இந்த வீடியோவை சச்சின் தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்து கோஹ்லியை வாழ்த்தியுள்ளார். அதற்கு கோஹ்லியும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
See all the 2018 #TIME100 honorees in under a minute https://t.co/ppzdOe0ckQ pic.twitter.com/dyTCJ9na05
— TIME (@TIME) April 19, 2018
இந்த 100 பேரில் இந்தியாவை சேர்ந்த ஒரே ஒரு விளையாட்டு வீரர் கோஹ்லி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதில் ரோஜர் பெடரர், கோஹ்லி மட்டுமே அமெரிக்காவை சேராத இரண்டு விளையாட்டு வீரர்கள். இந்திய சினிமா உலகில் இருந்து தீபிகா படுகோன் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications