மூலி சாப்பிட்டுட்டு.. கபாலி பார்த்துட்டு.. கோஹ்லியை மீட் பண்ணனும்.. இது ஷேவாக்!
மும்பை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வீரேந்திர ஷேவாக், தனது டிவிட்டர் பக்கத்தில் கோஹ்லி, கபாலி, மூலி ( பரோட்டா) என மூன்று லிக்கள் தான் தற்போது பேஷன் என வித்தியாசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நேற்று முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடிக்க இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.

இது ஒருபுறம் இருக்க, ரஜினி நடித்த கபாலி திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் கபாலி ரிலீசை திருவிழாப் போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக், கோஹ்லியையும், கபாலியையும் சேர்த்து கூடவே இன்னொரு லீயையும் கோர்த்து சுவாரஸ்யமான பதிவு ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதாவது, ‘தற்போது 3 ‘லி'க்கள் பேஷனாக உள்ளன. அவை, கோஹ்லி, மூலி (பரோட்டா) மற்றும் கபாலி ஆகும்' எனத் தெரிவித்துள்ளார்.
Three Li 's are in fashion
— Virender Sehwag (@virendersehwag) July 22, 2016
KohLi
MooLi (Paratha)
KabaLi
Enjoy all 3 today,eat MooLi Paratha and watch Kabali and then KohLi in d evening
மேலும், இந்த மூன்று ‘லி'க்களையும் இன்று ஒரே நாளில் தான் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது மூலி பரோட்டாவைச் சாப்பிட்டு விட்டு, கபாலி படம் பார்த்து விட்டு, பின்னர் கோஹ்லியைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications