தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்!!

தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வெண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மக்கள் தங்களின் அமைதியான போராட்டத்தால் முன்னுதாரணமாக திகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மக்கள் அமைதிக்காக்க வேண்டும் என வீரேந்திர சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிவிட்டர் மூலமாக சேவாக் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழகம் முழுவதும் அமைதியாக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Virender sehwag request tamilnadu people to be calm

இதனால் பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் எற்பட்டது. பல இடங்களில் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். தமிழக மக்கள் முன்னுதாரணமாக இருந்தார்கள். நிலையான நலன்களை தவறாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தயவு செய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்'' இவ்வாறு வீரேந்திர சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் அமைதியாக போராடியதற்காக அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். என தமிழிலேயே சேவாக் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+