ராணுவ வீரர்களுக்கு வீரேந்திர சேவாக் சல்யூட்- வைரல் வீடியோ
இந்திய ராணுவ வீரர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீபாவளியை முன்னிட்டு, இந்திய ராணுவ வீரர்களுக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள், இந்திய ராணுவ வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களை மதிக்கவும், ஊக்கம் கொடுக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்தார்.
இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன. வீரேந்திர சேவாக், வீடியோ மூலம் ஒரு வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் ராணுவ வீரர்களை எங்கு கண்டாலும் பொதுமக்கள், அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று, வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும் ஜெய்ஹிந்த் என்று அவர், தனது வேண்டுகோளை முடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications