"ஒட்டுத்துணி இல்லாமல்".. கேமராவில் சேர்மனின் அட்ராசிட்டி.. ஒரே ட்வீட்டில் பாஜகவை அலறவிட்ட திமுக

வீடியோ காலில் நிர்வாணமாக பேசி டார்ச்சர் தந்த பாஜக நிர்வாகி கைதானார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தன் காலேஜில் மாணவியிடம், நிர்வாணமாக வீடியோ காலில் நின்று பேசி, டார்ச்சர் தந்துள்ளார் பாஜக நிர்வாகி ஒருவர்.. இதையடுத்து இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் கல்லூரி என்ற பெயரில் ஒரு தனியார் காலேஜ் செயல்பட்டு வருகிறது.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.. வெளியூர் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகள் இங்கு அதிகளவில் படிக்கின்றனர்.. டிஎம்எல்டி, கேட்டரிங் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.

 பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

இந்த கல்லூரியின் சேர்மன் பாஜக நிர்வாகி ஆவார்... முன்னாள் பாஜக சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவருமாகவும் இருந்துள்ளார். அவர் பெயர் தாஸ்வின் ஜான் கிரேஸ்.. இங்கு படிக்கும் 2ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, இவர் அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளதாக கூறப்பட்டது.. வீடியோ காலில் நிர்வாணமாக வந்து நின்றாராம்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இது குறித்து சக மாணவிகளிடம் சொல்லி அழுதுள்ளார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவிகள், கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, நேற்றைய தினம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 ஆவேச முழக்கம்

ஆவேச முழக்கம்

சம்பந்தப்பட்ட சேர்மனை உடனே கைது செய்யுங்கள் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.. அதன்படியே சேர்மனும் கைதானார்.. எனினும், சமாதானம் ஆகாத மாணவிகள் தங்களுடைய சர்ட்டிபிகேட்கள், பணம் எல்லாவற்றையும் உடனடியாக திரும்பி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் எவ்வளவோ எடுத்து சொல்லியும், மாணவிகள் அந்த சமாதானத்தை ஏற்கவில்லை..

 கோரிக்கை

கோரிக்கை

இதனிடையே அந்த மாணவிகள் அனைவரும் ஒரு முக்கிய கோரிக்கையை எழுத்தப்பூர்வமாக விடுத்துள்ளனர். அதில், "மாணவியை ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக அழைத்து வீடியோ காலில் பேச வைத்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் சக மாணவிகள் குறித்து கேட்டறிந்து அவர்களிடம் அதேபோல் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை நிரூபிக்க எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள் சார்... தவறு நடந்த பிறகு காப்பதை விட தவறு நடப்பதற்கு முன்பே எங்களை காப்பாற்றுங்கள்,

 பயமா இருக்கு சார்

பயமா இருக்கு சார்

டாஸ்வினுக்கு கிடைக்கும் தண்டனை அந்தப் பெண்ணுக்கு கிடைத்த நீதி. எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். கல்லூரி மூடிவிட்டால் எங்கள் படிப்பு வீணாகி விடும். உடன்படிக்கும் பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தது எங்களுக்கு அச்சமாக உள்ளது. படிப்பை நிறுத்தாமல் வேறொரு கல்லூரியில் படிக்க அரசு உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. இதையடுத்து, திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி, இந்த கோரிக்கையை தன்னுடைய ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

 டிஆர்பி ராஜா ட்வீட்

டிஆர்பி ராஜா ட்வீட்

இதனை வைத்து, எம்எல்ஏ டிஆர்பி ராஜா ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "இதே வேலையாக திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது.? இத்தகைய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பை நடத்தும் காவிக் கொடூரர்களை என்ன செய்வது' என்று குறிப்பிட்டுள்ளார். #SaveGirlsFromSanghis என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பாஜகவினரை கேள்வி கேட்டும், விமர்சித்தும் வருகிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+