'Prestitutes'... மீடியாவை தாக்கிய மத்திய அமைச்சர் 'சர்ச்சை' சிங்!
டெல்லி: மத்திய அமைச்சர் வி.கே.சிங் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா காலில் விழுந்து வழங்குவது போன்ற ஒரு விடியோ வெளியாகியுள்ளது. இதை வி.கே.சிங் வன்மையாக மறுத்துள்ளார். அத்துடன் பத்திரிகையாளர்களை Prestitutes என்று மிக மோசமாகவும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த விஜய் பால் தோமர் என்பவர் அமித் ஷாவின் காலில் விழுந்து ஆசி பெற்றாராம்.

அப்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்தான் அமித் ஷா காலில் விழுந்து வணங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள வி.கே.சிங், ஒருசார்பாக செயல்படும் பத்திரிக்கையாளர்களால் இத்தகைய குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது (mischief by prestitutes) என ட்வீட் செய்துள்ளார்.
மற்றொரு பதிவில், நண்பர்களே இதற்கு தகுந்த பதிலடி கொடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக வி.கே.சிங் பயன்படுத்தியுள்ள prestitutes என்ற வார்த்தை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ தலைமைத் தளபதியாக இருந்தபோது, பொய்யான சான்றிதழ்கள் கொடுத்து உண்மையான வயதை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் மன்மோகன் சிங் அரசுடன் மோதி, உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டவர் விகே சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications